இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, December 6, 2007

அம்மா

வட்டு ஒட்டவோ
செல்லாங்குச்சி ஆடவோ
கீழ்வீட்டுப் பிள்ளைகளுடன்
‘கொல கொலயா
முந்திரிக்கா’ பாடவோ
தூண்டில் கொண்டு
தெண்டல் பிடிக்கவோ
எப்போதும்
அனுமதிக்காத அம்மா
ஆசையோடு அனுப்புகிறாள்
இன்று.

அடுப்புக்கு அரிசி வரும்வரை
அலைகழியும் தாய் மனசு.

5 comments:

மா.கலை அரசன் said...

அப்ப...
எல்லா கிராமத்திலயும் நாம ஒரே மாதிரியான விளையாட்டத்தான் விளையாடிருக்கோம்னை சொல்லுங்க...

நானானி said...

கடைசி வரி பிழிந்துவிட்டது...
பின்ன அந்தக் காலத்தில் கம்ப்யூட்டர் கேம்ஸும் கிரிக்கெட்டும் ஃரிஸ்பீயும் ஏது
கலையரசன்?

manjoorraja said...

அம்மாவின் இயலாமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

நல்ல கவிதை. நன்றி.

இன்று தான் நண்பர் சுந்தர் சொன்னதன் பேரில் உங்கள் பதிவிற்கு வந்தேன். எல்லாவற்றையும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

வாழ்த்துகள்.

successgopala said...

Hai my dear mama,

I am gopal from bangalore.Its nice.i remember in my past life to ambur.

ஆடுமாடு said...

கலை அரசன், நானானி. மஞ்சூர் ராசா , கோபால் வருகைக்கு நன்றி.