இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, December 6, 2007

கனவு புதையும் வீடு

நாள் முழுக்க பீடி சுற்றியும்
3 பண்டல் பாக்கி

களை எடுக்க போன அம்மா
கருக்கலில் வருவாள்.

தம்பி கொண்டு வந்த
சத்துணவு முட்டை
அப்பாவுக்காக காத்திருக்கிறது

ஈரவிறகில் தயாராகிறது சோறு

மேலத் தெரு அக்காள்கள்
கும்மியடிக்க
அழைக்கிறார்கள் தினமும்

கம்பிகள் பெயர்ந்த
ஜன்னலில்
கனவுகளைப் புதைக்கிறேன்

யார் வந்து மீட்பார்களோ?

5 comments:

மா.கலை அரசன் said...

என் கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்க தூண்டுகின்றீர்கள்.

ஆடுமாடு said...

நன்றி.

Raj Chandirasekaran said...

முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவில் பெண் குழந்தைத் தொழிலாளியின் அவலம். குழந்தையின் வருமானம் குடும்பத்தின் அவமானம் என்ரு எப்பொழுதுதான் தெரியுமோ!

ஆடுமாடு said...

வருகைக்கு நன்றி ராஜ்மோகன்.

குசும்பன் said...

சொல்ல வார்தைகள் இல்லை, மிகவும் அருமை