இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, December 6, 2007

ஆடாக வாழ்தல்


நீ பச்சத்தி மாடனுக்கு
நான் சொல்லமாடனுக்கு
நீ பலியாகும் கோயில்
கீழ்ப்பக்கம் இருக்கிறது
எனக்கு மேல் பக்கம்

வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
சாமிகள் இல்லாத
ஊரில் பிறக்க.

9 comments:

Ayyanar Viswanath said...

இந்த கவிதை படிச்சிட்டு உடனே வந்த சிரிப்பு கொஞ்ச நெரம் கழித்து என்னைப் பழித்துப் போனது

ஆடுமாடு said...

அய்யனார் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.

மா.கலை அரசன் said...

எதார்த்தம் ஆட்களின் வாயிலாக வெளிவரும் போது உண்மையும் அவைகளின் வேதனையும் நம்முகத்தில் அறையத்தான் செய்கின்றது....

மிக நல்ல கவிதை.

ஆடுமாடு said...

நன்றி கலைஅரசன்

ESMN said...

அண்ணாச்சி,
இந்த ரீ மிக்ஸ் படிங்க.....

நீ கிருஸ்துமத்துக்கு
நான் பக்ரீத்துக்கு
நீ பலியாகும் நாளு
நான் பலியாகும் நாளுக்கு மூன்று நாள் கழித்து

வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
மனிதன் இல்லாத
ஊரில் பிறக்க.



கிருஸ்துமஸ் - 25th December 2007
பக்ரீத் - 21st December 2007

ஆடுமாடு said...

//இந்த ரீ மிக்ஸ் படிங்க...//

பின்றீங்க அண்ணாச்சி. நல்லாயிருக்கு. கவிதையிலயும் ரீமிக்ஸா...ஆங்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க கவிதை.

ஆடுமாடு said...

நன்றி சுந்தர்ஜி.

குசும்பன் said...

படம் போடவில்லை என்றால் புரிஞ்சு இருக்காது. நச்