இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Saturday, August 16, 2008

இந்தி பேசலாம் வாங்க -15

இந்தி டென்ஸ்க்கான முழு டேபிள் இது. இதை வச்சு நீங்களே ரூட் வெர்ப் கொண்டு வாக்கியம் அமைக்கலாம். ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.


English - hindi - middle - resp - present - past - present continuous - past continuous - future

singlular ....................................................................................................................

Eat - KHA - -O - -IEA - THAA HOO(N) (M) - YAA(M) - RAHAAHOO(N)(M) - RAHAATHHAA (M) -OONGA
-O - -IEA - TEE HOO(N) (F) - YEE (F) - RAHEE HOO(N)(F) - RAHEETHHEE(F) -OONGEE(F)

2nd person................................................................................................................

THAE HO (M) - YAE(M) - RAHAE HO - RAHAE THHAE -OAGAE
THEE HO (F) - YEE(F) - RAHEE HO - RAHEETHHEE - OAGEE

RESPECT.......................................................................................................................

THAE HAI - YAE - RAHAE HAI - RAHAE THHAE - AENGAE
THEE HAI - YEE - RAHEE HAI -RAHEE THHEE -AENGEE

3rd person.....................................................................................................................

THAE HAI - YAE - RAHAE HAI - RAHAE THHAE - AENGAE
THEE HAI - YEE - RAHEE HAI - RAHEE THHEE - AENGEE


இரவுகவி உட்பட சில பதிவர்கள் கேட்டதால் ஆபிசுக்கு மட்டம் போட்டுவிட்டு இதை தயாரிச்சேன் மக்கா. யூஸ்புல்லா இருக்கான்னு சொல்லுங்க. நான் எப்படியோ டேபிள் போட்டா, இந்த லேஅவுட் எசகுபிசகா வந்திருக்கா. ஸாரி இதுக்கு நான் பொறுப்பல்ல

Thursday, August 14, 2008

இந்தி பேசலாம் வாங்க-14

future tense உதாரணங்கள்:

1. Mai kal AA UNGAA
மே கல் ஆவுங்கா.

நான் நாளைக்கு வருவேன்.

2.. Mai saamkku AA UNGAA
மே சாம்க்கு ஆவுங்கா.

நான் சாயந்திரம் வருவேன்.

2nd person

1. Aap rathko kidna bajae AENGAE
ஆப் ராத்கோ கித்னா பஜே ஆயெங்கே.

நீங்க ராத்திரி எத்தனை மணிக்கு வருவீங்க.

3rd person

1. oyelog kidna bajae dukkan (கடை) AEGAA

வோலோக் கித்னா பஜே துகான் ஆயெகா

அவங்க எத்தனை மணிக்கு கடைக்கு வருவாங்க.

.............

அவ்வளவுதான் முடிச்சுட்டேன். இனுமே நீங்க ஏதாவது கேள்வி கேட்டாதான். சரியா.

Wednesday, August 13, 2008

இந்தி பேசலாம் வாங்க-13

Future tense

இதுக்கான சபிக்ஸ்: Suffix :

1st person

Ans: UNGAA(M)
UNGEE(F)

2nd person

Q:OGAE(M) Middle level
Q:OGEE(F) Middle level

Q:AENGAE(M) Respect level
Q:AENGEE(F)-Respect level

3rd person

Q&A: AEGAA(M- middle- pularal)
Q&A: AEGEE(F-middle-sin/plu-object)
Q&A: AENGAE(M-resp/sin/plu)
Q&A: AENGEE(F-resp/sin/plu)


இதுக்கான உதாரணங்கள் விரைவில்.

Tuesday, August 12, 2008

இந்தி பேசலாம் வாங்க - 12

Past Continuous Tense

இதுக்கான suffix:

RAAHAATHHAA(M)
RAAHAATHHEE(F)
RAAHAATHHAE (Q-m)


1. Mai Kal aapkaa khar me aayathaa; oos dher aap kaam karahaathhaa.

நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். அந்த நேரம் நீங்க வேலை பார்த்துட்டு இருந்தீங்க.

2. Mai Kal Nayanthara ka pass baath karahaathhaa, oos time simpu ka phone call aakayaa Hai.

நான் நேத்து, நயந்தாராகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த நேரம் சிம்பு லைன்ல வந்துட்டாரு.

இவ்வளவுதாங்க.

இதுக்கு அடுத்து பியூச்சர் டென்ஸ்.

அதோட முடிஞ்சு போச்!

Monday, August 11, 2008

இந்தி பேசலாம் வாங்க - 11

Past Perfect Tense
..............
Was/were/had
இதுக்கான Suffix:
...........

THHAA - த்தா
THHEE - த்தீ
THHAE - த்தே


1. Mai bachban me Aurangapath Me rehthathaa.

நான் குழந்தை யா இருக்கும் போது (குழந்தை பருவத்துல) அவுரங்கா பாத்ல இருந்தேன்/இருந்திருக்கேன்.

2. Mai baanch Saal pahile Pune me Kaam Karthathaa.

நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னால புனாவுல வேலை செஞ்சேன்/செஞ்சிருக்கேன்.

ஒ.கே.வா. இதுமாதிரி நீங்களே ரெண்டு எழுதி அனுப்புங்க.

இந்தியில எல்லா மெக்கானிக்கல் திங்க்ஸும் பீ்மேல்லதான் வரும். அதாவது வாட்ச்ன்னு சொன்னா தமிழ்ல கடிகாரம்னு பொது பெய்ர் இருக்கு.

கடிகாரம் ஆண்பாலா? பெண்பாலா? ரெண்டும் இல்லை. ஆனா இந்தியில இது பெண்பால். கடிகாரம், கார் இந்த மாதிரி மெக்கானிக்கல் பொருட்களை அப்படித்தான் சொல்லுவாங்க.

கடிகாரம்- கடீ
வண்டி/கார்- காடீ.

ஒகே.

இதையும் தெரிஞ்சுக்கோங்க.

IS SE BAHILE - இதுக்கு முன்னால

BEECHME- இடையில

USKAE BAATH- அதுக்குப் பிறகு

LEGIN- ஆனால் (BUT)

BAHTHME- பிறகு/அப்புறமா

Friday, August 8, 2008

இந்தி பேசலாம் வாங்க - 10

past tense

இறந்த காலத்தை குறிப்பதற்கான இந்தி சொற்கள் (suffix):

YAA(M) /YEE(F) /YAE (question to male) (இதுல சில எக்ஸம்சன் இருக்கு)

பாடம் 2-ல இருக்கிற ரூட் வெர்ப்பை கொண்டு இந்த சபிக்ஸை சேர்த்தா இறந்த காலம்.

உதாராணமா:

COME ங்கறதுக்கு இந்தியில AA.

இதை AA YAA / AA YEE ஆக்குனா பாஸ்ட் டென்ஸ்.

1.Mai dhus(பத்து) Bajae (மணிக்கு) AAYAA hou.

நான் பத்து மணிக்கு வந்தேன்.

Female ஆ இருந்தா AAYEE .

2. Get up - Got up

UTT- UTT AA
UTTEE(F)

Mai subhe paanj(அஞ்சு) pajae UTTAA hou.

நான் காலையில அஞ்சு மணிக்கு எழுந்தேன்.

3. See- Saw

DEKH- DEKHAA
DEKHEE(F)

Kal (yesterday) Mai Kuselan movie DEKHAA hou.

நான் நேற்று குசேலன் படம் பார்த்தேன்.

4. D0 - DID

இதுல D0 ன்னா KHAR. அப்ப இதோட AA சேர்த்திடலாம்னு நினைச்சுடாதீங்க. சில எக்ஸம்சன்ஸ் இருக்குன்னு சொன்னேன்ல அதுல இதுவும் ஒண்ணு.

அதாவது
KHAR- KHARAA( பீகார்ல மட்டும்தான் இப்படி பேசுவாங்க. மற்ற ஸ்டேட்ல இப்படி பேசுனா ஹி ஹிம்பாங்க..அதாவது சிரிப்பாங்க. ஒகே.

இதுக்கு என்ன சொல்லணும்னா

KHAR- KIYAA
KIYEE
Kal poora dhin (நாள்) Mai ne kham (வேலை) kiyaa hou.

நேற்று நாள் பூரா வேலை பார்த்தேன்.

5. GIVE - GAVE
DAE - DIYAA
DIYEE
இதை பாஸ்ட்ல சொல்லும் போது DAE DIYAA (தே தியா)ன்னு சேர்த்து சொல்லணும். பெண்கள்ன்னா தே தியீ.

Mai Oonkaa pass daediyaa hou.

நான் அவங்கிட்ட கொடுத்திட்டேன்.

6.TAKE- TOOK
LAE - LIYAA
LIYEE

இதையும் இப்படி சேர்த்துதான் சொல்லணும்.

7. GO - WENT

JAA- GAYAA
GAYEE

O gayaa hai
அவன் போயிட்டான்.

ஒரேடியா போயிட்டான்/போயிட்டு, இனும வரமாட்டான்/வராதுன்னு சொல்லணும்னா

CHAALAA GAYAAன்னு சொல்லணும்.
அதாவது longterm use க்கு இதை பயன்படுத்தலாம்.

இன்னைக்கு இவ்ளோ போதுங்க. நாளைக்கு பார்க்கலாம்.

Thursday, August 7, 2008

இந்தி பேசலாம் வாங்க - 9

இந்த டேபிளும் முக்கியம்.


1. I - AM - MY

Mai - Hou - Mere(M)/Meree (மேரா/ம்மேரீ)

2. WE - ARE - OUR

Hum - Hai - Hamaraa(M) /Hamaree (F)(ஹமாரா/ஹமாரீ)

3. YOU - ARE - YOUR

(Disrespect)
Tu - Hai - Tumaraa (M)/Tumaree (துமாரா/துமாரீ)

Tum (midle) - Ho - '' ''

Aap(respect) - Hai - Aapkaa(M)/Aapkee (ஆப்கா/ஆப்கீ)


4. HE/SHE - IS - HIS/HER - HIM/HER

A/A (near) - Hai - 0oskaa(M)/0oskee(F)(உஸ்கா/உஸ்கீ) - Oonkaa(M)/Oonkee(F) (உன்கா/உன்கீ)
0/0 (Distance) - Hai

5. THEY - ARE - THOSE

Oye(log) - Hai - Ooslogkaa(M)/ ooslogkee (F)(உஸ்லோக்கா/உஸ்லோக்கீ)

6. THAT - is - THEM

0 - Hai - Oonlogkaa(m)/Oonlogkee(f) (உன்லோக்கா/உன்லோக்கீ)

THIS/IT - IS -

A - Hai '' ''


..............


1.Tumaraa/Aapkaa Naam kiyaa hai?

உன்/உங்களுடைய பெயர் என்ன?

Mera Naam Raj hai.

மேரா நாம் ராஜ் ஹே/ஹை.

2. Tumaraa/Aapkaa khar kidhar hai?

உன்/உங்களுடைய வீடு எங்க இருக்கு?

Hamaraa Khar K.K.nagar Mai hai.

என்/எங்கள் வீடு கே.கே.நகர்ல இருக்கு.

3.Oonkaa khar kidhar hai?

அவனோட வீடு எங்க இருக்கு?

Oonkaa Khar T.nagar mai hai.

அவன் வீடு தி.நகர்ல இருக்கு.

4. Ooslogkaa khar kidhar hai?

அவங்களோட வீடு எங்க இருக்கு?

Ooslogkaa khar Mylapore mai hai.

அவங்க வீடு மயிலாப்பூர்ல இருக்கு.


log(லோக்)ன்னா மக்கள்னு அர்த்தம். 00nlogkன்னு வந்துட்டா அவங்களுடையன்னு வந்துரும்.

Mera (என்னுடைய) எனக்குன்னு சொல்லணும்னா Mujae (முஜே).

Mujae chatni jiye.
..............

1 st person (singular) - 1st person ( Plural)

to Me - to us

Mujae /mujko - Hamse/hamko

2nd person - 2nd person Plural

to you - to you

Tumko - Tumlokko

Aapko - Aaploko

3rd person (singular) - plural

to this - to those

usko - uslokoko

to him - to them

unko (respect) - unlokoko
.............

இதை மனப்பாடம் பண்ணினா போதும். இன்னும் ஏகப்பட்டது இருக்கு. அதெல்லாம் ரேரா பேசும்போதுதான் வரும்.

இதுக்கான எக்ஸாம்பிள்ஸ் நாளைக்கு.

இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கஜி.

Tuesday, August 5, 2008

இந்தி பேசலாம் வாங்க - 8

வேற்றுமை உருபுகள்


English - Hindi - Tamil - Application

.....................................................................................

With (ke) - SAATH (சாத்) - உடன் - support (human)

With (ke) - PAAS (பாஸ்) - கிட்ட - support (object)

With - SE (ஸே) - ஆல் - Human body

From - SE (ஸே) - இருந்து - separate

For --- - LIYE - காக - Give/donate

Of - KAA(M)/KEE(F) - உடைய - Relation 3rd gender

On - Par - மேலே - location object

In - Mae (n) - லே - location object

To - AE/KO(ஏ/கோ) - க்கு - purpose (human)


ஆங்கிலத்துல இதுக்கு என்ன சொல்லுவோம் (இங்க்லீஷ் கிராமர் மறந்து போச்சு)

பேசுறதுக்கு இவை முக்கியம்.

உதாரணங்கள்:

1.என்னுடன் வா
Mera saath aa

2. எங்கிட்ட இருக்கு.
Mera paas Hai

3. கையால் எடு
Haath se lae

4. திருநெல்வேலியிருந்து வர்றேன்.
Trinelveli se aarahaa hou.

5. எனக்காக கொடேன்
Meraliye Dhae

6. அவன் வீடு அங்க இருக்கு.
Uskaa Khar udhar hai

7. டேபிள் மேல
Table Par

8. பாக்கெட்ல இருக்கு
Packet mae Hai

9. அவனுக்கு கொடு

USkko Dhae.

ஒகேவா. ஆதலால் மாணவர்களே(?!) இதை படிங்க. நான் முதல்ல வெறொன்னை சொல்லிக்கொடுத்திருக்கணும். அதை விட்டுட்டேன். அதை சொல்லிக்கொடுத்திருந்தா இன்னும் ஈசியா இருந்திருக்கும். ஸாரி, அடுத்த வகுப்புல பார்ப்போம். நன்றி.

இந்தி பேசலாம் வாங்க-7

கடந்த வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்:

utt raahaa hou
dhek raahaa hou
pee raahaa hou

Want to-விருப்பம் சார்ந்து சொல்ல வேண்டியவற்றுக்கு

CHHAAHAATHAA(Male) ஜஹாத்தா
CHAAHAATHEE (Female) ஜஹாத்தீ
CHAAHAATHAE (Question to Male) ஜஹாத்தே...

இதுல என்ன இன்னொரு விஷயம்னா வெர்ப்க்கு முன்னால Naa வரும். வரணும்.

நான் தண்ணி குடிக்க போறேன்.

Mai Baani (பாணி-தண்ணி) peenaa CHHAAHAATHAA hou.

நான் சினிமா பார்க்க போறேன். (பெண்பால்)

Mai Movie dheknaa CHAAHAATHEE hou.

இதே போல ரெண்டு மூணு விஷயங்களை நீங்களும எழுதலாம்.
..................

May/Can/Shall- இது மாதிரியான request களுக்கு,

SHAKTHAA (Male)
SHAKTHAA (Female)
SHAKTHAE (Question Male)

Mai Andhar(உள்ளே) aa shakthae kiyaa?

நான் உள்ள வரமுடியுமா? வரலாம்ல

AaP aa sakthaa hai.

நீங்க் வரலாம்/ வரமுடியும்

Mai Avi Jaa sakthae Kiyaa?

இப்ப நான் போகலாம்ல.

Aap jaa sakthaa hai.

நீங்க போகலாம்/ முடியும்

Mai baani pee sakthae kiya?

நான் தண்ணிக்குடிக்க முடியுமா?

Aap pee sakthaa hai

நீங்க குடிக்க முடியும்/குடிக்கலாம்.
.......................

Have to -

PADEGAA (Male)- படேகா

PADEGEE (Female)- படேகீ

நான் போக வேண்டியிருக்கு

Mai Jaanaa Padegaa.

சார், வீட்டுக்கு போகவேண்டியிருக்கு.

Sir, Khar (வீடு) jaanaa padegaa

எனக்கு செண்ட்ரல் ஸ்டேஷன் போகவேண்டியிருக்கு.

Mujae Central station jaanaa padegaa.
......................

இதெல்லாம் சூத்திரம் மாதிரி... இதை முடிச்சுட்டு கான்வர்சேசன் போகலாம். இது தொடர்பா சந்தேகம் இருந்தா கேளுங்க.

அடுத்த வகுப்பில் வேற்றுமை உருபுகளை பார்க்கலாம்.

Sunday, August 3, 2008

இந்தி பேசலாம் வாங்க---- 6

'கொண்டு...' ங்கறது பிரசண்ட் கண்டினியூஸ் டென்ஸ்க்கு தமிழ்ல குறிப்பிடப்படற வார்த்தை.

'என்னை பண்றே?'

'பிகர் பார்த்து்ட்டு(கொண்டு) இருக்கேண்டா.

இந்தியில இதுக்கான சபிக்ஸ்: RAAHAA---- (ரஹா)

RAAHAA (Male)
RAAHEE ( Female question and answer)
RAAHAE (Question male)

பாடம் - 2ல சொல்லியிருக்கிற ரூட் வெர்புகளை கொண்டு இதை பிரசண்ட் கண்டினியூஸ்க்கு நீங்க மாத்தலாம்.

AA - (வா) AA RAAHAA - ஆரஹா.

வ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் அர்த்தம்.

பெண்களா இருந்தா, AA RAAHEE.

AAP kidhar Hai?

நீங்க எங்க இருக்கீங்க?

Mai JAA RAAHAA H0

நான் போய்க்கொண்டிருக்கேன்.
தமிழ்ல யாரும் இவ்வளவு இலக்கணமா சொல்றது கிடையாது. போய்க்கிட்டிருக்கேன்னு சொல்வதுதான் வழக்கம். இந்தி பேசி பழகிட்டீங்கன்னா, இந்த JAA RAAHAA H0 ஜாரோம்னு ஆயிரும்.
ஒ.கே அது வேண்டாம்.

உங்களுக்கு சின்ன எக்ஸர்சைஸ்:

1. Get up- utt (உட்)
2. See- Dhek(தேக்)
3. Drink- pee( பீ)

இதை RAAHAA போட்டு எழுதுங்க.

Tuesday, July 29, 2008

இந்தி பேசலாம் வாங்க-5

பதில்கள்:

1. KAR (do-செய்) KARTHAA- செய்கிறேன்.

MAI KAAM(வேலை) KARTHAA HOU.

நான் வேலை செய்கிறேன்.


2. SEE (பார்-தேக்) DEKTHAA

MAI DEKTHAA HOU.

நான் பார்க்கிறேன்.


3. LAAH (take- எடு) LAAH THAA

MAI LAAHTHAA HOU.

நான எடுக்கிறேன்.

4. PEE (Drink- குடி) PEE THAA

MAI PEETHAA HOU.

நான் குடிக்கிறேன்.


5. KHAA (Eat-சாப்பிடு) KHAA THAA

MAI KHAA THAA HOU.

நான் சாப்பிடுகிறேன்

................

கீழே உள்ளவற்றில் பாதியை மனப்பாடம் செய்தால் கூட நீங்கள் ஓரளவு பேசலாம்.

1. WHEN- kAB ( கப்)
2. WHY- KYU (N) (க்யூ)
3. WHO- KOUN (க்கோன்)
4.WHAT- KIYA (கியா)
5.WHICH- KOUNSA (க்கொன்சா)
6.WHOSE- KISKA (கிஸ்கா)
7.WHOME- KISKAELIYE (கிஸ்கேலியே)
8.HOW- KAISE (கைஸே)
9.HOWMUCH- KITHNA (கித்னா)
10.EARLY MORNING- SUBARE (சுபாரே)
11.DAY- DIN (தின்)
12. DAILY- ROJE (ரோஜ்)
13. AFTERNOON- DUPHAR (துபார்)
14.EVENING- SHAAM (சாம்)
15.NIGHT- RATH/RATHRI ( ராத், ராத்ரி)
16.TODAY- AAJ (ஆஜ்)
17.TOMORROW- KAL (கல்)
18.YESTERDAY- KAL (கல்)
19. DAY AFTER TOMMORROW- PARSU (பர்சூ)
20.DAY BEFORE YESTERDAY- PARSU.(பர்சூ)
21.WEEK- HAPTHA (ஹப்தா)
22.FROM- SE (சே)
23. TO/TILL/UPTO- THAK (தக்)
24. MONTH- MAHINA (மஹினா)
25.ALL RIGHT- ACHCHA (அச்சா)
26.VERY WELL- BEUHATH ACHCHA (பஹூத் அச்சா)
27.NEVER MIND - KOI BAATH NAHI (கோயி பாத் நஹி)
28.HOW FAR- KIDNI DOOR (கித்னி தூர்)
29. HOW LONG- KIDNI DER. (கித்னி தேர்)
30.WELLDONE-SABASH. (சபாஷ்).

இதில் நேற்று/ நாளை ரெண்டுக்கும் கல் தான். அதே போல நாளை மறுநாள் என்பதற்கும் முந்தா நாள் என்பதற்கும் பர்சூ தான் வரும். பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படும்.

வாத்தியார் இப்போது பிசி என்பதால், இதற்க்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் நாளையோ நாளை மறுநாளோ சொல்லித்தரப்படும். அதையடுத்து பிரசண்ட் கண்டினியூஸ் டென்ஸ். தமிழ்ல ஒரு வார்த்தையை வச்சு, present continious tense ஐ சொல்லலாம். அந்த வார்த்தை எது என்று சொன்னால் எக்ஸ்ட்ரா மார்க் உண்டு.
ஓகே.

Monday, July 28, 2008

இந்தி பேசலாம் வாங்க -4

நீங்க ஈசியா பேச இன்னும் சில விஷயங்கள்:

பர்ஸ்ட்பெர்சன்ல கேள்வி கேட்கிறீங்க/ பதில் சொல்றீங்க. இதுக்கு கீழே உள்ள வார்த்தைய பயன்படுத்தணும்.

THAA -தா (Male)

THEE - தீ (female)

THAE- தே (Male Question).

பெண்களை குறிக்க - தீ ங்கற வார்தையை கடைசியில் சேர்த்துக்கணும்.

அதாவது : கியா கர்த்தீ ஹை

ஆண்பாலா இருந்தா கியா கர்த்தா ஹை-இப்படி வரும்.

ஒகே மேலே சொன்ன விஷயத்துக்கு வர்றேன்.


COME (வா) அப்படிங்கறதுக்கு AA ன்னு சொல்லியிருந்தோம்.
இப்ப பாருங்க.

அந்த AA வையும் THAA வையும் சேருங்க.

சேர்த்தா AATHAA (ஆத்தா) இப்படி வரும்.

Femal ஆ இருந்தா AATHEE ( ஆத்தீ )ன்னு வரும்.

Tum kidhna bajae Hindi class AATHAE / AATHEE hou?

தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?.

(நீ எத்தனை மணிக்கு இந்தி வகுப்பு வருகிறாய்?)

இதுக்கு பதில்:

Mae dhus bajae Hindi class AATTHAA hou

நான் 10 மணிக்கு இந்தி வகுப்பு வருகிறேன்.

வகுப்பு ரெண்டுல சொல்லியிருக்கிற ரூட் வெர்ப்புகளை இப்படி சேர்த்து எழுதி நீங்க ப்ராக்டீஸ் பண்ணி பேசலாம்.

நான்கு வார்த்தைகள் சொல்றேன்.

இதை, மேலே சொல்லியிருக்கிற மாதிரி THAA / THEE / THAE போட்டு எழுதுங்க.

1. KAR

2. SEE

3. LAAH

4. PEE

5. KHAA

Thursday, July 24, 2008

இந்தி பேசலாம் வாங்க -3 -பதில்கள்

கேள்விக்கான பதில்கள்

1. Mr.Ramesh you sit here, I sit there

மிஸ்டர் ரமேஷ் ஆப் இதர் பைட்டீயே, மை உதர் பைட்தா ஹும்.


2. Suresh you bring my luggage , I take your luggage

சுரேஷ், ஆப் மேரா சாமான் லாயீயே, மே ஆப்கா சாமான் லாத்தா ஹூம்.


3. You drink tea. I drink coffee
ஆப் சாய் பீஜீயே, மே காபி பீத்தா ஹூம்.

4. You go now , I come later
ஆப் அவி ஜாவோ, மே பாத்மே ஆத்தா ஹூம்.

5. Don't read Book. see T.V
புஸ்தக் மத் படோ, டி.வி. தேக் ஹோ

இந்தி பேசலாம் வாங்க- 3

பாடம் 2-க்கான கேள்விகள்


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள்
கடந்த 2 பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தெரியாத வார்த்தைக்கான பதி்ல் அடைப்பு குறிக்குள்.


ஒ.கே எழுதுங்க.



1. Mr.Ramesh you sit here, I sit there.

2. Suresh you bring my luggage (saamaan-சாமான்),
I take your luggage.


3. You drink tea. I drink coffee.


4. You go now (அவி). I come later.(bhaathme/Bhir-பாத்மே/ பீர்)


5. Don't read Book. see T.V

Tuesday, July 22, 2008

இந்தி பேசலாம் வாங்க. 2.ம் பாடம்

போன வகுப்புல கேட்ட கேள்விக்கான விடை:

1. What is This?
ஏ க்யா ஹை

2. That is This
ஓ ஏ ஹை

3. What is That?
ஓ க்யா ஹை

4. Where are you?
ஆப் கஹாங்/கிதர் ஹை

பெரும்பாலான மாணவர்கள்(?!) சரியா சொல்லியிருந்தாங்க. தப்பா எழுதின குசும்பன்(லீடரே இப்படி இருக்கலாமா?) 50 முறை சரியா எழுதிட்டு வர ஆசிரியர் உத்தரவு!.
............

ஓகே.

இந்தியில் அனைத்து வாக்கியத்துக்கும் வினைச்சொல் (verb) உண்டு.
இந்த வினைச்சொல் அனைத்தும் இறுதியில்தான் வரும்.

உதாரணம்:
'ஏ கியா ஹை"- இதில் ஹை - verb.


ஒரு வாக்கியத்தை தொடங்கும் போது Mai (நான்) என்று தொடங்கினால் முடிக்கும் போது Hou (n) ஹூ என்று முடிக்க வேண்டும்.ஷாரூக் நடிச்ச மே ஹூன் னா படம் ஞாபகத்துக்கு வருதா? (இந்தப் படத்தைதான் ராஜூ சுந்தரம் 'ஏகன்'ங்கற பேர்ல உல்டா பண்றாருன்னு இன்னொரு தகவல்)

Tum (தும்- நீ) என்று தொடங்கினால், Ho (ஹோ) என்று முடிக்க வேண்டும். AAP (ஆப்- நீங்கள்) என்றால் Hai (ஹை) என்று முடிக்கவேண்டும்.

Mai hou (n)
Tum ho
AAp hai (n)

............
I- (MAI மே) ன்னா நான்.

I am ன்னா MAI HOU (மே ஹூ)

We (நாங்கள்)ன்னா HUM-ஹம்

We are ன்னா HUM HAI (ஹம் ஹே)

YOU are ன்னா TUM HO (தும் ஹோ).

இது சூத்திரம் மாதிரி. மனப்பாடம் பண்ணிக்குங்க.

Who are you?

நீ யாரு?
Tum koun ho?

நீங்க யாரு?
Aap koun Hai


koun-ன்னா யாரு?ன்னு அர்த்தம்.

அப்புறம் ரூட் வெர்ப் க்கு போவோம்.

இது தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க்ன்னா ஈசியா பேசலாம்.


English Hindi Middle level Respect level

Come (வா) AA (ஆ) AAO (ஆவோ) AAIEA (ஆயியே)

Eat (சாப்பிடு) KHAA (கா) KHAAO (காவோ) KHAAIEA (காயியே)

Get up (எழுந்திரு) UTT (உட்) UTTO (உட்டோ) UTTIEA (உட்டீயே)

Write ( எழுது) LEEKH (லீக்) LEEKHO (லீகோ) LEEKHIEA (லீக்கியே)

See ( பார்) DHEKH (தேக்) DHEKHO (தேகோ) DHEKHIEA (தேக்கியே)

Do (செய்) KAR (கர்) KARO (கரோ) KARIEA / KIJIEA கரீயே/ககீஜீயே

Sit (உட்கார்) BAIT (பைட்) BAITTO (பைட்டோ) BAITTIEA (பைட்டீயே)

Go (போ) JAA (ஜா) JAAO (ஜாவோ) JAAIEA (ஜாயியே)

Reed ( படி) PAD (பட்) PADO (படோ) PADIEA (படீயே)

Bring ( எடு) LAAH (லா) LAAHO (லாவோ/லாஹோ) LAAHIEA (லாயியே)

Drink (குடி) PEE (பீ) PEEO (பீயோ) PEEJIEA (பீஜியே)

Take (எடு) LAE (லே) Loh (லோ) LIJIEA (லீஜியே)

Talk ( பேசு) BOL (போல்) BOLO (போலோ) BOLIEA (போலீயே)

...............................

Don't ---------Math, No/Not........Nahi/ Naa

மேக்சிமம் இதெல்லாம் 2nd person ல வரும்.

மரியாதையா நீங்க கூப்பிடணும்னா, பேசுற வார்த்தைக்கு பின்னால லீயே/ஜீயே சேர்த்துக்குங்க.

IDHAR- (இதர்)- இங்கே

UDHAR (உதர்)- அங்கே
...............

தும் இதர் ஆவோ

நீ இங்க வா

ஆப் இதர் ஆயியே

நீங்க இங்க வாங்க.


தும் தோசா காவோ

நீ தோசை சாப்பிடு

ஆப் தோசா காயியே

நீங்க தோசை சாப்பிடுங்க.
.................

இன்னைக்கு இவ்வளவுதான்.

நாளைக்கு கேள்விகள் கேட்கிறேன்.
குசும்பன் ஒழுங்கா படிக்கணும்.
.............

Monday, July 21, 2008

இந்தி பேசலாம் வாங்க: முதல் பாடம்

எல்லாரும் வகுப்புக்கு வந்தாச்சா?

இது ஸ்போக்கன் இந்திதான்.

அதனால் உன்னிப்பாக இலக்கணத்தை கவனிக்க வேண்டாம். முதலில் பேசுவதற்கான சில அடிப்படை விஷயங்களை சொல்லிவிடுகிறேன். பிறகு மற்றது:

you - tu/ tum (து/தும்) இந்த இரண்டும் நெருங்கியவர்கள் / நண்பர்களை குறிக்க. மரியாதையாக சொல்ல வேண்டும் என்றால் AAp (ஆப்) என்று சொல்லணும்.
This (இது) - A (ஏ)
Thart (அது) - 0 (ஓ)
What (என்ன)- Kiyaa ( கியா)
Where (எங்கே)- Kahaa/ (கஹாங்)/ Kidhar (கிதர்)
Here (இங்கே) - IDHAR (இதர்) IHaa( இஹா)
There (அங்கே)- Udhar (உதர்) / Uhaa (உஹா)
Is - Hai
Are - Hai
In - Mae
On- Par
Above (மேலே)- Uppar (உப்பர்)
Under (கீழே)- Nichae (நிச்சே)
Hand (கை) - Hath (ஆத்)
Inside (உள்ளே) - Andhar (அந்தர்)
Outside (வெளியே)- Baahaar (பஹார்)
......
இதை முதல்ல படிங்க.

இந்தியில ஒரு சன்டன்ஸை முடிக்கும்போது Hai (ஹை) போட்டுதான் முடிக்கணும்.
இதுல கைக்கு எட்டாத இடத்தை சொல்லும்போது (Uppar)உப்பர்னு சொல்லணும். கைக்கு எட்டுற இடத்தை (Par) பர் ன்னு சொல்லணும்.

ஊதாரணமா, 'டேபிள் மேல'ன்னு சொல்லணும்னா, டேபிள் பர். வீட்டு மேலன்னு சொல்லணும்னா, கர்கா உப்பர்ன்னு சொல்லணும். ஓ.கே. கொஞ்சம் கொஞ்சமா படிக்கலாம்.

மேல இருக்கற வார்த்தைகளை வச்சு சில கேள்விகள்:

சரியா சொன்னா மார்க் உண்டு.
சொல்லலைன்னாலும் உண்டு.

1. What is This?
2. That is This
3. What is That?.
4. Where are you?

இந்தி பேசலாம் வாங்க

மொழி சுகமானது. அதில் முங்கி நீந்த தெரிந்தால் நீங்க பாக்யவான்கள். இந்தியாவில் மட்டும் 3372 மொழிகள் பேசப்படுவதாக தகவல். இந்த அனைத்து மொழியும் தெரிந்தால் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்.

இந்திய மக்கள் தொகையில் 41 சதவிகிதம் பேர் இந்தி மொழி பேசுகின்றனர். இதிலும் இந்தி மொழியை 48 விதமாக பேசுகிறார்களாம். நீங்கள் மும்பையில் இருந்தால் நீங்கள் பேசும் இந்தியை டெல்லி காரர்கள் ஏற்க மாட்டார்கள். அது சென்னை தமிழ் மாதிரியாம். இப்படியான இந்தி சரக்கை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பேசவதற்கான பயிற்சிதான் இது. உங்களோட சேர்த்து (மறந்து போனதை) நானும் படிக்கிறேன். ஆனால், நண்பர்களே... இதுல நீங்க ஏகப்பட்ட கேள்வி கேக்கணும். அப்பதான் எனக்கும் மூளையை கொஞ்சம் உபயோகப்படுத்த முடியும். ஒகே நாளையிலயிருந்து கிளாசுக்கு வந்திருங்க.
பிரம்போடு காத்திருக்கிறேன்.

Monday, June 16, 2008

பேச்சு

யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.


தவிப்பு
--------

தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!

மருந்து
.............
காலில் பீங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.

குங்குமத்தில் வெளியான எனது கவிதை

Monday, January 21, 2008

நினைவுகளைச் சேமிப்பவன்

என் சொற்களைத் திருடும் பாக்கியம் உனக்கிருக்கிறது.
நீ நானாகும் போது எனக்கான சொற்கள் உனக்கானதாக மாறுவதில் வியப்பில்லை.
கூந்தலுக்குள் அழுந்தாமல் வெளியேறும் உன் ஒற்றை முடியில், என் உயிரை தொங்கவிடும் ஆற்றல் பெற்றிருக்கிறாய்.
கருணையில்லா கடவுளர்கள், சக்திகளை பெண்களுக்கே படைப்பதிலான ஓரவஞ்சனையில் எப்போதாவது வெடிக்கக்கூடும் பெரும் போர்.
பார்வை பட்டோ அல்லது பேசியோ திரும்புகிற அதிர்ஷ்ட தருணங்களில் நான்கு முறை இறக்கிறேன். மூன்று முறை பிறக்கிறேன்.
பிறத்தலும் இறத்தலும் உனக்கான கொடூர விளையாட்டு. எப்போதும் நான் தோற்க நினைக்கிற விளையாட்டை உன்னால்தான் நடத்த முடிகிறது.
கைக்குள் காற்றை அடைத்து அதில் நீந்த நினைக்கின்ற மோசக்காரன் நான். நீ காற்றாக இருக்கும் வரை இதுவும் சாத்தியமென்றே நினைக்கிறேன். நேற்றைய கனவில் வந்த யுத்தம் பற்றிய விவாதத்தில் உன் ஞாபகங்களே வென்றன. உன் நினைவுகளை சேமிப்பவனாகவே எப்போதும் இருக்கிறேன். உடலெங்கும் வீங்கி, பிதுங்கிக் கிடக்கும் நினைவின் துறுத்தல்களில் எப்போதாவது தெறிக்கக்கூடும் ஒரு துளி ரத்தம்.
இதுபற்றியான நம் உரையாடல் நிலமெங்கும் சிதறி கிடக்கிறது. கடலை தாண்டவோ, நீந்தவோ தகுதியற்ற என் ஏக்கங்களின் வாய்க்கால்கள், ஆற்றை தொடும் முன்னே முடிந்து விடுவதன் காரணம் மட்டும் புரியவே இல்லை.