இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, October 9, 2007

புரிதல்

கடைசியாகச் சொல்லிவிடுவதென
முதலில் நினைத்து விடுகிறதென் நீள் மனது

கடைசியைப் பற்றிய சிந்தனையில்
முதலை மறந்துவிடுகிறேன்.

முதலும் இல்லாமல்
கடைசியும் இல்லாமல்
தொடங்குகிறது உரையாடல்

நீ பேசுவது எனக்கும்
என் மவுனம் உனக்கும்
புரியாமலேயே
கேட்பதாக ஆடுகிறது
அனிச்சையானதென் தலை.

புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.

4 comments:

காயத்ரி சித்தார்த் said...

//புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.
//

ஹ்ம்ம்ம்!

ஆடுமாடு said...

வாங்க காயத்ரி...ஏதோ உங்க லெவல்ல இல்லைன்னாலும் கொஞ்சம் ட்ரை பண்ணக்கூடாதா?
ம்.

lucky said...

saw your kavithai...seems to be that you are in a deep confused mood and with mixed feelings i think you have written that...but then hmmmmmmmmmmmmm....you are right

ஆடுமாடு said...

thangai நீங்க நினைக்கிறது சரி. நான் கொஞ்சமல்ல் ரொம்பவே குழப்பவாதி.