இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, July 29, 2008

இந்தி பேசலாம் வாங்க-5

பதில்கள்:

1. KAR (do-செய்) KARTHAA- செய்கிறேன்.

MAI KAAM(வேலை) KARTHAA HOU.

நான் வேலை செய்கிறேன்.


2. SEE (பார்-தேக்) DEKTHAA

MAI DEKTHAA HOU.

நான் பார்க்கிறேன்.


3. LAAH (take- எடு) LAAH THAA

MAI LAAHTHAA HOU.

நான எடுக்கிறேன்.

4. PEE (Drink- குடி) PEE THAA

MAI PEETHAA HOU.

நான் குடிக்கிறேன்.


5. KHAA (Eat-சாப்பிடு) KHAA THAA

MAI KHAA THAA HOU.

நான் சாப்பிடுகிறேன்

................

கீழே உள்ளவற்றில் பாதியை மனப்பாடம் செய்தால் கூட நீங்கள் ஓரளவு பேசலாம்.

1. WHEN- kAB ( கப்)
2. WHY- KYU (N) (க்யூ)
3. WHO- KOUN (க்கோன்)
4.WHAT- KIYA (கியா)
5.WHICH- KOUNSA (க்கொன்சா)
6.WHOSE- KISKA (கிஸ்கா)
7.WHOME- KISKAELIYE (கிஸ்கேலியே)
8.HOW- KAISE (கைஸே)
9.HOWMUCH- KITHNA (கித்னா)
10.EARLY MORNING- SUBARE (சுபாரே)
11.DAY- DIN (தின்)
12. DAILY- ROJE (ரோஜ்)
13. AFTERNOON- DUPHAR (துபார்)
14.EVENING- SHAAM (சாம்)
15.NIGHT- RATH/RATHRI ( ராத், ராத்ரி)
16.TODAY- AAJ (ஆஜ்)
17.TOMORROW- KAL (கல்)
18.YESTERDAY- KAL (கல்)
19. DAY AFTER TOMMORROW- PARSU (பர்சூ)
20.DAY BEFORE YESTERDAY- PARSU.(பர்சூ)
21.WEEK- HAPTHA (ஹப்தா)
22.FROM- SE (சே)
23. TO/TILL/UPTO- THAK (தக்)
24. MONTH- MAHINA (மஹினா)
25.ALL RIGHT- ACHCHA (அச்சா)
26.VERY WELL- BEUHATH ACHCHA (பஹூத் அச்சா)
27.NEVER MIND - KOI BAATH NAHI (கோயி பாத் நஹி)
28.HOW FAR- KIDNI DOOR (கித்னி தூர்)
29. HOW LONG- KIDNI DER. (கித்னி தேர்)
30.WELLDONE-SABASH. (சபாஷ்).

இதில் நேற்று/ நாளை ரெண்டுக்கும் கல் தான். அதே போல நாளை மறுநாள் என்பதற்கும் முந்தா நாள் என்பதற்கும் பர்சூ தான் வரும். பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படும்.

வாத்தியார் இப்போது பிசி என்பதால், இதற்க்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் நாளையோ நாளை மறுநாளோ சொல்லித்தரப்படும். அதையடுத்து பிரசண்ட் கண்டினியூஸ் டென்ஸ். தமிழ்ல ஒரு வார்த்தையை வச்சு, present continious tense ஐ சொல்லலாம். அந்த வார்த்தை எது என்று சொன்னால் எக்ஸ்ட்ரா மார்க் உண்டு.
ஓகே.

Monday, July 28, 2008

இந்தி பேசலாம் வாங்க -4

நீங்க ஈசியா பேச இன்னும் சில விஷயங்கள்:

பர்ஸ்ட்பெர்சன்ல கேள்வி கேட்கிறீங்க/ பதில் சொல்றீங்க. இதுக்கு கீழே உள்ள வார்த்தைய பயன்படுத்தணும்.

THAA -தா (Male)

THEE - தீ (female)

THAE- தே (Male Question).

பெண்களை குறிக்க - தீ ங்கற வார்தையை கடைசியில் சேர்த்துக்கணும்.

அதாவது : கியா கர்த்தீ ஹை

ஆண்பாலா இருந்தா கியா கர்த்தா ஹை-இப்படி வரும்.

ஒகே மேலே சொன்ன விஷயத்துக்கு வர்றேன்.


COME (வா) அப்படிங்கறதுக்கு AA ன்னு சொல்லியிருந்தோம்.
இப்ப பாருங்க.

அந்த AA வையும் THAA வையும் சேருங்க.

சேர்த்தா AATHAA (ஆத்தா) இப்படி வரும்.

Femal ஆ இருந்தா AATHEE ( ஆத்தீ )ன்னு வரும்.

Tum kidhna bajae Hindi class AATHAE / AATHEE hou?

தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?.

(நீ எத்தனை மணிக்கு இந்தி வகுப்பு வருகிறாய்?)

இதுக்கு பதில்:

Mae dhus bajae Hindi class AATTHAA hou

நான் 10 மணிக்கு இந்தி வகுப்பு வருகிறேன்.

வகுப்பு ரெண்டுல சொல்லியிருக்கிற ரூட் வெர்ப்புகளை இப்படி சேர்த்து எழுதி நீங்க ப்ராக்டீஸ் பண்ணி பேசலாம்.

நான்கு வார்த்தைகள் சொல்றேன்.

இதை, மேலே சொல்லியிருக்கிற மாதிரி THAA / THEE / THAE போட்டு எழுதுங்க.

1. KAR

2. SEE

3. LAAH

4. PEE

5. KHAA

Thursday, July 24, 2008

இந்தி பேசலாம் வாங்க -3 -பதில்கள்

கேள்விக்கான பதில்கள்

1. Mr.Ramesh you sit here, I sit there

மிஸ்டர் ரமேஷ் ஆப் இதர் பைட்டீயே, மை உதர் பைட்தா ஹும்.


2. Suresh you bring my luggage , I take your luggage

சுரேஷ், ஆப் மேரா சாமான் லாயீயே, மே ஆப்கா சாமான் லாத்தா ஹூம்.


3. You drink tea. I drink coffee
ஆப் சாய் பீஜீயே, மே காபி பீத்தா ஹூம்.

4. You go now , I come later
ஆப் அவி ஜாவோ, மே பாத்மே ஆத்தா ஹூம்.

5. Don't read Book. see T.V
புஸ்தக் மத் படோ, டி.வி. தேக் ஹோ

இந்தி பேசலாம் வாங்க- 3

பாடம் 2-க்கான கேள்விகள்


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள்
கடந்த 2 பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தெரியாத வார்த்தைக்கான பதி்ல் அடைப்பு குறிக்குள்.


ஒ.கே எழுதுங்க.



1. Mr.Ramesh you sit here, I sit there.

2. Suresh you bring my luggage (saamaan-சாமான்),
I take your luggage.


3. You drink tea. I drink coffee.


4. You go now (அவி). I come later.(bhaathme/Bhir-பாத்மே/ பீர்)


5. Don't read Book. see T.V

Tuesday, July 22, 2008

இந்தி பேசலாம் வாங்க. 2.ம் பாடம்

போன வகுப்புல கேட்ட கேள்விக்கான விடை:

1. What is This?
ஏ க்யா ஹை

2. That is This
ஓ ஏ ஹை

3. What is That?
ஓ க்யா ஹை

4. Where are you?
ஆப் கஹாங்/கிதர் ஹை

பெரும்பாலான மாணவர்கள்(?!) சரியா சொல்லியிருந்தாங்க. தப்பா எழுதின குசும்பன்(லீடரே இப்படி இருக்கலாமா?) 50 முறை சரியா எழுதிட்டு வர ஆசிரியர் உத்தரவு!.
............

ஓகே.

இந்தியில் அனைத்து வாக்கியத்துக்கும் வினைச்சொல் (verb) உண்டு.
இந்த வினைச்சொல் அனைத்தும் இறுதியில்தான் வரும்.

உதாரணம்:
'ஏ கியா ஹை"- இதில் ஹை - verb.


ஒரு வாக்கியத்தை தொடங்கும் போது Mai (நான்) என்று தொடங்கினால் முடிக்கும் போது Hou (n) ஹூ என்று முடிக்க வேண்டும்.ஷாரூக் நடிச்ச மே ஹூன் னா படம் ஞாபகத்துக்கு வருதா? (இந்தப் படத்தைதான் ராஜூ சுந்தரம் 'ஏகன்'ங்கற பேர்ல உல்டா பண்றாருன்னு இன்னொரு தகவல்)

Tum (தும்- நீ) என்று தொடங்கினால், Ho (ஹோ) என்று முடிக்க வேண்டும். AAP (ஆப்- நீங்கள்) என்றால் Hai (ஹை) என்று முடிக்கவேண்டும்.

Mai hou (n)
Tum ho
AAp hai (n)

............
I- (MAI மே) ன்னா நான்.

I am ன்னா MAI HOU (மே ஹூ)

We (நாங்கள்)ன்னா HUM-ஹம்

We are ன்னா HUM HAI (ஹம் ஹே)

YOU are ன்னா TUM HO (தும் ஹோ).

இது சூத்திரம் மாதிரி. மனப்பாடம் பண்ணிக்குங்க.

Who are you?

நீ யாரு?
Tum koun ho?

நீங்க யாரு?
Aap koun Hai


koun-ன்னா யாரு?ன்னு அர்த்தம்.

அப்புறம் ரூட் வெர்ப் க்கு போவோம்.

இது தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க்ன்னா ஈசியா பேசலாம்.


English Hindi Middle level Respect level

Come (வா) AA (ஆ) AAO (ஆவோ) AAIEA (ஆயியே)

Eat (சாப்பிடு) KHAA (கா) KHAAO (காவோ) KHAAIEA (காயியே)

Get up (எழுந்திரு) UTT (உட்) UTTO (உட்டோ) UTTIEA (உட்டீயே)

Write ( எழுது) LEEKH (லீக்) LEEKHO (லீகோ) LEEKHIEA (லீக்கியே)

See ( பார்) DHEKH (தேக்) DHEKHO (தேகோ) DHEKHIEA (தேக்கியே)

Do (செய்) KAR (கர்) KARO (கரோ) KARIEA / KIJIEA கரீயே/ககீஜீயே

Sit (உட்கார்) BAIT (பைட்) BAITTO (பைட்டோ) BAITTIEA (பைட்டீயே)

Go (போ) JAA (ஜா) JAAO (ஜாவோ) JAAIEA (ஜாயியே)

Reed ( படி) PAD (பட்) PADO (படோ) PADIEA (படீயே)

Bring ( எடு) LAAH (லா) LAAHO (லாவோ/லாஹோ) LAAHIEA (லாயியே)

Drink (குடி) PEE (பீ) PEEO (பீயோ) PEEJIEA (பீஜியே)

Take (எடு) LAE (லே) Loh (லோ) LIJIEA (லீஜியே)

Talk ( பேசு) BOL (போல்) BOLO (போலோ) BOLIEA (போலீயே)

...............................

Don't ---------Math, No/Not........Nahi/ Naa

மேக்சிமம் இதெல்லாம் 2nd person ல வரும்.

மரியாதையா நீங்க கூப்பிடணும்னா, பேசுற வார்த்தைக்கு பின்னால லீயே/ஜீயே சேர்த்துக்குங்க.

IDHAR- (இதர்)- இங்கே

UDHAR (உதர்)- அங்கே
...............

தும் இதர் ஆவோ

நீ இங்க வா

ஆப் இதர் ஆயியே

நீங்க இங்க வாங்க.


தும் தோசா காவோ

நீ தோசை சாப்பிடு

ஆப் தோசா காயியே

நீங்க தோசை சாப்பிடுங்க.
.................

இன்னைக்கு இவ்வளவுதான்.

நாளைக்கு கேள்விகள் கேட்கிறேன்.
குசும்பன் ஒழுங்கா படிக்கணும்.
.............

Monday, July 21, 2008

இந்தி பேசலாம் வாங்க: முதல் பாடம்

எல்லாரும் வகுப்புக்கு வந்தாச்சா?

இது ஸ்போக்கன் இந்திதான்.

அதனால் உன்னிப்பாக இலக்கணத்தை கவனிக்க வேண்டாம். முதலில் பேசுவதற்கான சில அடிப்படை விஷயங்களை சொல்லிவிடுகிறேன். பிறகு மற்றது:

you - tu/ tum (து/தும்) இந்த இரண்டும் நெருங்கியவர்கள் / நண்பர்களை குறிக்க. மரியாதையாக சொல்ல வேண்டும் என்றால் AAp (ஆப்) என்று சொல்லணும்.
This (இது) - A (ஏ)
Thart (அது) - 0 (ஓ)
What (என்ன)- Kiyaa ( கியா)
Where (எங்கே)- Kahaa/ (கஹாங்)/ Kidhar (கிதர்)
Here (இங்கே) - IDHAR (இதர்) IHaa( இஹா)
There (அங்கே)- Udhar (உதர்) / Uhaa (உஹா)
Is - Hai
Are - Hai
In - Mae
On- Par
Above (மேலே)- Uppar (உப்பர்)
Under (கீழே)- Nichae (நிச்சே)
Hand (கை) - Hath (ஆத்)
Inside (உள்ளே) - Andhar (அந்தர்)
Outside (வெளியே)- Baahaar (பஹார்)
......
இதை முதல்ல படிங்க.

இந்தியில ஒரு சன்டன்ஸை முடிக்கும்போது Hai (ஹை) போட்டுதான் முடிக்கணும்.
இதுல கைக்கு எட்டாத இடத்தை சொல்லும்போது (Uppar)உப்பர்னு சொல்லணும். கைக்கு எட்டுற இடத்தை (Par) பர் ன்னு சொல்லணும்.

ஊதாரணமா, 'டேபிள் மேல'ன்னு சொல்லணும்னா, டேபிள் பர். வீட்டு மேலன்னு சொல்லணும்னா, கர்கா உப்பர்ன்னு சொல்லணும். ஓ.கே. கொஞ்சம் கொஞ்சமா படிக்கலாம்.

மேல இருக்கற வார்த்தைகளை வச்சு சில கேள்விகள்:

சரியா சொன்னா மார்க் உண்டு.
சொல்லலைன்னாலும் உண்டு.

1. What is This?
2. That is This
3. What is That?.
4. Where are you?

இந்தி பேசலாம் வாங்க

மொழி சுகமானது. அதில் முங்கி நீந்த தெரிந்தால் நீங்க பாக்யவான்கள். இந்தியாவில் மட்டும் 3372 மொழிகள் பேசப்படுவதாக தகவல். இந்த அனைத்து மொழியும் தெரிந்தால் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்.

இந்திய மக்கள் தொகையில் 41 சதவிகிதம் பேர் இந்தி மொழி பேசுகின்றனர். இதிலும் இந்தி மொழியை 48 விதமாக பேசுகிறார்களாம். நீங்கள் மும்பையில் இருந்தால் நீங்கள் பேசும் இந்தியை டெல்லி காரர்கள் ஏற்க மாட்டார்கள். அது சென்னை தமிழ் மாதிரியாம். இப்படியான இந்தி சரக்கை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பேசவதற்கான பயிற்சிதான் இது. உங்களோட சேர்த்து (மறந்து போனதை) நானும் படிக்கிறேன். ஆனால், நண்பர்களே... இதுல நீங்க ஏகப்பட்ட கேள்வி கேக்கணும். அப்பதான் எனக்கும் மூளையை கொஞ்சம் உபயோகப்படுத்த முடியும். ஒகே நாளையிலயிருந்து கிளாசுக்கு வந்திருங்க.
பிரம்போடு காத்திருக்கிறேன்.