இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, December 24, 2007

நினைவின் வெளி

உன் சாயலைப்போல் தெரியும்

பெண்களிடமெல்லாம்

ஏதாவது பேசிவிடுகிறேன்.

ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்தில்

உன்னை போலவே தெரிந்த

பெண்ணிடம்பேச நினைக்க

அது நீயாகவே இருந்தாய்

பேசாமலேயே திரும்பினேன்.

........................................................


'நீயில்லையின்னா

செத்துப்போயிருவேன்' என்ற நீ,

உன் கணவனுடனும்

நான் என் மனைவியுடனும்

அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

காதல், கல்யாணத்தில் முடிய

பூக்கட்டிப் பார்த்ததில்

சாதக பதில் தந்த

வடக்குவா செல்வி அம்மன்

அப்படியே இருக்கிறாள்

ஆக்ரோஷமாக.

கோயில் சுற்ற வரும் இளசுகள்

நம்மைப்போலவே இன்றும்

காதலிக்கிறார்கள்

பூக்கட்டுகிறார்கள்.

அம்மனும் தயாராகவே

இருக்கிறாள்

அருள்பாலிக்க.

தமிழ் சிஃபியில் வெளியான என் கவிதை.

4 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அடடா, நிறைய காதல் அனுபவம் உண்டு போலத் தெரியுதே... இல்லாட்டி, நிறைய பேரைக் காதலித்த அனுபவமா. (ஏன்னா, முதல் கவிதையும் இரண்டாவது கவிதையும் வேறு வேறு பெண்கள் மாதிரி இருக்கே).

ஆடுமாடு said...

//அடடா, நிறைய காதல் அனுபவம் உண்டு போலத் தெரியுதே..//

காதல் ஆசை இருந்தா போதும்னு நினைக்கிறேன் சார்.

ஆடுமாடு said...

சும்மா டெஸ்ட்

குசும்பன் said...

நல்ல வேளை இந்த கவிதை போல் அனுபவம் ஏற்படவில்லை.

டக் என்று என்னை போன்ற பாமரனுக்கும் புரிகிறது உங்கள் கவிதைகள், அதில் ஒளிந்து இருக்கும் உறவு மிகவும் அழகாக இருக்கிறது.