இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, July 21, 2008

இந்தி பேசலாம் வாங்க: முதல் பாடம்

எல்லாரும் வகுப்புக்கு வந்தாச்சா?

இது ஸ்போக்கன் இந்திதான்.

அதனால் உன்னிப்பாக இலக்கணத்தை கவனிக்க வேண்டாம். முதலில் பேசுவதற்கான சில அடிப்படை விஷயங்களை சொல்லிவிடுகிறேன். பிறகு மற்றது:

you - tu/ tum (து/தும்) இந்த இரண்டும் நெருங்கியவர்கள் / நண்பர்களை குறிக்க. மரியாதையாக சொல்ல வேண்டும் என்றால் AAp (ஆப்) என்று சொல்லணும்.
This (இது) - A (ஏ)
Thart (அது) - 0 (ஓ)
What (என்ன)- Kiyaa ( கியா)
Where (எங்கே)- Kahaa/ (கஹாங்)/ Kidhar (கிதர்)
Here (இங்கே) - IDHAR (இதர்) IHaa( இஹா)
There (அங்கே)- Udhar (உதர்) / Uhaa (உஹா)
Is - Hai
Are - Hai
In - Mae
On- Par
Above (மேலே)- Uppar (உப்பர்)
Under (கீழே)- Nichae (நிச்சே)
Hand (கை) - Hath (ஆத்)
Inside (உள்ளே) - Andhar (அந்தர்)
Outside (வெளியே)- Baahaar (பஹார்)
......
இதை முதல்ல படிங்க.

இந்தியில ஒரு சன்டன்ஸை முடிக்கும்போது Hai (ஹை) போட்டுதான் முடிக்கணும்.
இதுல கைக்கு எட்டாத இடத்தை சொல்லும்போது (Uppar)உப்பர்னு சொல்லணும். கைக்கு எட்டுற இடத்தை (Par) பர் ன்னு சொல்லணும்.

ஊதாரணமா, 'டேபிள் மேல'ன்னு சொல்லணும்னா, டேபிள் பர். வீட்டு மேலன்னு சொல்லணும்னா, கர்கா உப்பர்ன்னு சொல்லணும். ஓ.கே. கொஞ்சம் கொஞ்சமா படிக்கலாம்.

மேல இருக்கற வார்த்தைகளை வச்சு சில கேள்விகள்:

சரியா சொன்னா மார்க் உண்டு.
சொல்லலைன்னாலும் உண்டு.

1. What is This?
2. That is This
3. What is That?.
4. Where are you?

33 comments:

Syam said...

உள்ளேன் ஐயா

Anonymous said...

நல்ல முயற்சி வாழ்த்துகள்

மொழி பெயர்ப்பு சரியான்னு சொல்லுங்க‌

1. ஏ க்யா ஹே
2. ஓ ஏ ஹே
3. ஓ க்யா ஹே
4. ஆப் கஹா ஹே / தும் கஹா ஹே / கஹா ஹே து

துளசி கோபால் said...

அச்சா ஹுவா ஆப் மில்கயா:-)

Anonymous said...

ea kyaa hai?

o ea hai !

o kyaa hai ?

aap kahaa(n)hai ?

Sariya paarththu sollunga
appadiye indha lessions continue pannunga....

Syam said...

What is This?
எ கியா ஹை
Where are you?
ஆப் கிதர் ஹை

நான் ஏழை, கஷ்டப்பட்டு படிச்சு இருக்கேன் எப்படியாவது பாஸ் பொட்ருங்க சார் :-)

Unknown said...

1. What is This?
ஏ கியா ஹை?
2. That is This
ஓ ஏ ஹை?
3. What is That?.
ஓ கியா ஹை?
4. Where are you?
தும் கிதர் ஹை?

நான் பாஸ் ஆயிட்டனுங்களா?
அன்புடன்
சந்துரு

சரவணகுமரன் said...

வட நாட்டு பிகர்களை பார்த்திட்டு பேச முடியாம தவிக்கும் பலருக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும்...

தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்...

Anonymous said...

good job. go ahead

M.Vijayan

ஆடுமாடு said...

Syam,
நன்றி.

அனானி,
குட். இவ்வளவுதான். அப்படியே எழுதிட்டு விட்டுடாதீங்க. போற வாறவங்களை கூப்பிட்டு பேசுங்க. ஈசியா கத்துக்கலாம்.

துளசி டீச்சர்,

ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க.

மது, சரிதான்.

தாமோதர் சந்துரு, நீங்கள் பாஸ்தான்.

சரவணகுமார், விஜய்ன் நன்றி..

வகுப்பு வநத மாணவர்களுக்கு நன்றி.

Anonymous said...

நான் பதில் முயற்சி பண்ணறதுக்குள்ள விடைகள் வெளி வந்துருச்சு. இருந்தாலும் பரவாயில்லைன்னு முயற்சி பண்ணினேன். மே பாஸ் ஹூம்

Unknown said...

thanx for ur effort...me too passed in ur test...

மங்களூர் சிவா said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்


/
1. What is This?
ஏ க்யா ஹை

2. That is This
ஓ ஏ ஹை

3. What is That?.
ஓ க்யா ஹை
க்யா ஹை ஓ

4. Where are you?
ஆப் கஹாங் ஹை

அரே சாலா கஹாங் ஹை யார் என சொல்ல கூடாது :))
/

ஆடுமாடு said...

சின்ன அம்மணி, கமல் வருகைக்கு நன்றி.

அடுத்த கிளாஸ் நாளைக்கு...

மங்களூர் சிவா,

அரே சாலா கஹாங் ஹை யார் என சொல்ல கூடாது :))

இதுவும் சொல்லலாம். உங்க நண்பர்கள் வட்டத்துல.

நன்றி சிவா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கியா வை க்யா என்று தானே சொல்லறோம் அதுனால் எழுதும் போதும் க்யா என்றே எழுதுங்களேன்..ஆத் என்பதையும் ஹாத் என்றே தமிழில் எழுதி வையுங்கள் உச்சரிப்புக்கு சரியாக இருக்கும்..

Anonymous said...

// வட நாட்டு பிகர்களை பார்த்திட்டு பேச முடியாம தவிக்கும் பலருக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும்... //

இப்படி குட்டைய குழப்புறதுக்குனே கொஞ்ச பேர் இருக்காங்க போல :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா ஆரம்பிச்சிட்டீங்களா...
முதல்ல அட்டெண்டென்ஸ்...
அப்புறம் கிளாசுக்கு வரேன்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

மே கிளாஸ் மே ஹை..
ஏக் அட்டெண்டென்ஸ் தீஜியே.. ஜீ

ஆடுமாடு said...

//கியா வை க்யா என்று தானே சொல்லறோம்//

கயல்விழி நன்றி. மாத்திக்கிறேன்.
அப்புறம இது ஸ்போக்கந்தானே...


//இப்படி குட்டைய குழப்புறதுக்குனே கொஞ்ச பேர் இருக்காங்க போல :)//

வெயிலான் சும்மா தமாசுக்குதான்.

கிருத்திகா நன்றி.

குசும்பன் said...

what is this?
கியா ஹய் ஏ?

That is This
ஓ ஹய் ஏ?

What is That?.
கியா ஹை ஏ?

Where are you?
கிதர் ஹய் (you அவுட் ஆப் சிலபஸ்)

குசும்பன் said...

ஹய் என்பதை கடைசியாக எல்லாத்திலும் சேர்க்க மறந்துட்டேன்.

குசும்பன் said...

ஒரு சின்ன யோசனை

அடுத்த வகுப்புக்கு போகும் முன்பு...சரியான பதிலை இந்த பாடத்தின் கீழே நீங்களே விடைகள் என்று சொல்லிடுங்க, பின்னூட்டத்தில் சொல்லாமல். பாடத்தோடு சேர்த்துவிட்டால், லேட்டாக வரும் அல்லது கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கும் பைத்தியகாரர் வந்தால் உபயோகமாக இருக்கும்.

கிரி said...

ரொம்ப நாளா ஹிந்தி கத்துக்க ஆசை

எனக்கு தெரிந்த கொஞ்சம்

துமாரா நாம் கியாகை
மேராநாம் கிரி
ஹிந்தி நகி மாலும்

பஸ் (போதும்)

பாணி

அப்புறமா ஏக் தோ தீன் சார் பாஞ் ச்சே தஸ்..நான் தேறுவேனா?? :-(((

pudugaithendral said...

வாழ்த்துக்கள்.

மிக அருமையான முயற்சி.

thamizhparavai said...

அப்பாடா.. உங்க மூலமாவது ஹிந்தி கத்துக்கிறேன்..(ஒரு வருஷம் ஆச்சு வட இந்தியா வந்து.. இன்னும் சைகை பாஷைதான்) முன்னதான நனறிகள்..

Anonymous said...

REALLY VERY GOOD ATTEMPT SIR.... PLEASE INCLUDE MORE DIALOGUES....

ராஜ நடராஜன் said...

இதெல்லாம் முன்னாடி சொல்லிக்குடுத்திருந்தா பம்பாய்ல உடுப்பி ஓட்டல்ல கரண்டிக்குப் பதிலா கையில மசாலா தோசை சாப்பிடும்போது பார்த்துச் சிரித்த பொண்ணுகளுக்குப் பதிலடி கொடுக்கப் பயனிருந்திருக்குமில்ல.

அபி போல்கே கியா பைதா ஹை.

(இது இங்க வந்து இந்தி சினிமாப் பார்த்தும் தமிழ் தெரியாதவங்கிட்டப் பேசியும் கத்துகிட்டது)

ராஜ நடராஜன் said...

//வட நாட்டு பிகர்களை பார்த்திட்டு பேச முடியாம தவிக்கும் பலருக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும்... //

அட நம்ம மாதிரி அனுபவசாலிகள் நமக்கு முன்னே வரிசையில நிக்குறாங்க போலிருக்கு:-)

புதுகை.அப்துல்லா said...

நமஸ்தே உஸ்தாத் ஜி.

1. What is This?
ஏ க்யா ஹை

2. That is This
ஓ ஏ ஹை

3. What is That?.
ஓ க்யா ஹை

4. Where are you?
ஆப் கஹாங் ஹை


நா பாசா?

துளசி கோபால் said...

நீங்க சொல்லிக்கொடுத்தப் பிறகு நான் போஜ்பூரி ஹிந்தி சொல்லிக் கொடுப்பேனாம்:-)

ஒயித்தோ ஹை = ஆமாமாம்.

துல்சி போலீஸ்= துல்சி சொன்னா(ங்க)

அட.....இது போலீஸ் இல்லைப்பா

bolees. போல்தீஸ் என்பதன் ஸ்லாங்:-)

Ramya Ramani said...

ஏ கியா ஹே

ஓ கியா ஹே

ஓ கியா ஹே

ஆப் கஹான் ஹே

சரிங்களா?

நிஜமா நல்லவன் said...

நானும் சேர்ந்துக்கிறேன்.

நானானி said...

யே மை(ன்) போலீஸ்.....
துமார க்லாஸ் அச்சா ஹை!

மை ஹிந்தி தோடா தோடா மாலூம் ஹை! போலோ கை ஸே ஹை?

ஷுக்ரியா தூர்தர்ஷன்!!!

ஆடுமாடு said...

//பாடத்தோடு சேர்த்துவிட்டால், லேட்டாக வரும் அல்லது கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கும் பைத்தியகாரர் வந்தால் உபயோகமாக இருக்கும்//

ரொம்ப நன்றி குசும்பன் .

//ரொம்ப நாளா ஹிந்தி கத்துக்க ஆசை//

கிரி, கத்துக்கிட்டா போச்சு.

புதுகை தென்றல், தமிழ்பறவை, அனானி,அப்துல்லா, ரம்யா ரமணி நன்றி.

ராஜ நடராஜன், இப்ப என்ன?தெருவுக்கு தெருவுக்கு இந்தி காரங்க சுத்துறாங்க.

துளசி டீச்சர், இந்தியே குழப்புது. போஜ்புரியா?