இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, July 21, 2008

இந்தி பேசலாம் வாங்க

மொழி சுகமானது. அதில் முங்கி நீந்த தெரிந்தால் நீங்க பாக்யவான்கள். இந்தியாவில் மட்டும் 3372 மொழிகள் பேசப்படுவதாக தகவல். இந்த அனைத்து மொழியும் தெரிந்தால் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்.

இந்திய மக்கள் தொகையில் 41 சதவிகிதம் பேர் இந்தி மொழி பேசுகின்றனர். இதிலும் இந்தி மொழியை 48 விதமாக பேசுகிறார்களாம். நீங்கள் மும்பையில் இருந்தால் நீங்கள் பேசும் இந்தியை டெல்லி காரர்கள் ஏற்க மாட்டார்கள். அது சென்னை தமிழ் மாதிரியாம். இப்படியான இந்தி சரக்கை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பேசவதற்கான பயிற்சிதான் இது. உங்களோட சேர்த்து (மறந்து போனதை) நானும் படிக்கிறேன். ஆனால், நண்பர்களே... இதுல நீங்க ஏகப்பட்ட கேள்வி கேக்கணும். அப்பதான் எனக்கும் மூளையை கொஞ்சம் உபயோகப்படுத்த முடியும். ஒகே நாளையிலயிருந்து கிளாசுக்கு வந்திருங்க.
பிரம்போடு காத்திருக்கிறேன்.

27 comments:

ஜோசப் பால்ராஜ் said...

எனக்கு ஹிந்தி தெரியாது,ஆனால் கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது.
என்னை உங்கள் பள்ளியின் பாலர் பிரிவில் சேர்த்துக்கொள்ளவும்.

Anonymous said...

ஹய்யோ! சீக்கிரம் வகுப்பை ஆரம்பிங்க அண்ணாச்சி. நம்ம தொழிலுக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

இந்த ஹிந்திக்காரனுகளுக்கு, இங்கிலீசுல சொல்லி வெளங்க வைக்கிறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திப்போகுது.

Unknown said...

அய்யா! உங்க வகுப்பறையிலே எனக்குமொரு இடம் கிடைக்குமா?

நன்கொடை, கட்டிட நிதி எதுனாலும் கட்டணும்னாலும் சொல்லுங்க, கட்டிடலாம். ;-)

Anonymous said...

உங்க வகுப்புல எனக்கும் அனுமதி குடுங்க. மத்யமா 10 வருஷத்துக்கு முன்னாடி படிச்சதோட சரி, இந்தி மறந்தாச்சு

கே.என்.சிவராமன் said...

பதிவுலகில் இது, முதல் ப்ளஸ் புது முயற்சி என நினைக்கிறேன் ஆடுமாடு.

வாழ்த்துகள். தொடருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆடுமாடு said...

ஜோசபபண்ணே வணக்கம்,

ஆரம்பிச்சிடலாமா?

Syam said...

//ஜோசப் பால்ராஜ் said...
எனக்கு ஹிந்தி தெரியாது,ஆனால் கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது.
என்னை உங்கள் பள்ளியின் பாலர் பிரிவில் சேர்த்துக்கொள்ளவும்.

July 21, 2008 12:21 AM
வெயிலான் said...
ஹய்யோ! சீக்கிரம் வகுப்பை ஆரம்பிங்க அண்ணாச்சி. நம்ம தொழிலுக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

இந்த ஹிந்திக்காரனுகளுக்கு, இங்கிலீசுல சொல்லி வெளங்க வைக்கிறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திப்போகுது.

July 21, 2008 12:22 AM
karikalan said...
அய்யா! உங்க வகுப்பறையிலே எனக்குமொரு இடம் கிடைக்குமா?

நன்கொடை, கட்டிட நிதி எதுனாலும் கட்டணும்னாலும் சொல்லுங்க, கட்டிடலாம். ;-)

July 21, 2008 1:07 AM
சின்ன அம்மிணி said...
உங்க வகுப்புல எனக்கும் அனுமதி குடுங்க. மத்யமா 10 வருஷத்துக்கு முன்னாடி படிச்சதோட சரி, இந்தி மறந்தாச்சு//

ரிப்பீட்டு....

நானும் எத்தன வருசமா இந்தில பேசனும்னு நினைச்சிட்டு இருக்கேன், கடைசீல உங்க மூலமா நிறைவேருது, ரொம்ப நன்றிங்க வாத்தியார் (ஏக் கவ் மே ஏக் கிஸான் அப்படின்னு ஆரம்பிக்க மாட்டீங்க தான ) :-)

ஆடுமாடு said...

//இந்த ஹிந்திக்காரனுகளுக்கு, இங்கிலீசுல சொல்லி வெளங்க வைக்கிறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திப்போகுது//

வெயிலான் அவங்க கூட வேலை பார்த்தாலே பேச வந்திருமே...

ஆடுமாடு said...

//நன்கொடை, கட்டிட நிதி எதுனாலும் கட்டணும்னாலும் சொல்லுங்க, கட்டிடலாம். ;-)//

கரிகாலன் அப்படியே புல்லரிக்குது. போதுங்க.

/இங்க நன்கொடை வசூலிக்கப்பட மாட்டாது'[ன்னு போர்டு வச்சிடவா.

வெண்பூ said...

காத்திருக்கிறேன், கற்பதற்கு...

கூடுதுறை said...

i am also coming....

mim be aa rahaa hoong...

Bleachingpowder said...

முதல் பாடம் என்ன? ஏக் காவுமே,ஏக் கிஸ்ஸான் ரஹ தாத்தா தானே :-)

பாத்துங்க, ஹிந்தியை எதிர்பதற்க்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடியவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். அப்புறம் உங்க Blog அ தார் பூசி அழிப்பு போராட்டம்னு ஏதாவது ஆரம்பிச்சுட போறாங்க

Ken said...

நானும் வரேங்க :)

ஆடுமாடு said...

//பதிவுலகில் இது, முதல் ப்ளஸ் புது முயற்சி என நினைக்கிறேன் ஆடுமாடு//

நன்றி நண்பா.

ஆடுமாடு said...

//(ஏக் கவ் மே ஏக் கிஸான் அப்படின்னு ஆரம்பிக்க மாட்டீங்க தான ) :-)//

ஸ்யாம் அதெல்லாம் ஓல்டு. நம்ம ஸ்டைலே வேற. எந்த புக்லயும் கிடையாது.

நல்லதந்தி said...

பிரசண்ட் சார்!.
உள்ளேன் ஐயா!

ஆடுமாடு said...

வெண்பூ, கூடுதுறை, நாளைக்கு பத்து மணிக்கு வகுப்புல ஆஜராகிடுங்க.

ஆடுமாடு said...

பி.பவுடரு, கொஞ்சம் தார் கொண்டு வர்றீங்களா?

கென் நாளைக்கு வந்திடுங்க.

Anonymous said...

// வெயிலான், அவங்க கூட வேலை பார்த்தாலே பேச வந்திருமே...//

என் கூட யாரும் வேல பாக்கலை. மும்பை, டெல்லிலருந்து பேசறவங்களுக்கு வெறும் இந்தி மட்டும் தான் தெரியுது. இங்கிலீஷ்ல பேசி புரிய வைக்கிறதுக்குள்ள.......

Unknown said...

அய்யா...உங்களுக்கு புண்ணியமா போகும்...சீக்கிரம் ஆரம்பிங்க சாமி!!!! நான் சென்னையிலேந்து இப்போதான் மும்பை வந்தேன்...இவங்களோட மாரடிக்க முடியல... :(((((

Syam said...

//நாளைக்கு பத்து மணிக்கு வகுப்புல ஆஜராகிடுங்க//

சார் பத்து மணில இருந்த இங்க தான் உக்காந்திட்டு இருக்கேன், கிளாஸ் ஆரம்பிசுடுவீங்கள இல்ல போய் ஒரு தம் டீ அடிச்சிட்டு வந்துடவா :-)

குசும்பன் said...

ஆடுமாடு சீக்கிரம் ஆரம்பிங்க, நானும் வருகிறேன், கிளாஸ்க்கு போய் வாத்தியாரை டரியல் ஆக்கி ரொம்ப நாளாச்சு!

சேதுவில் மனோபாலா கானீர் குவளை நீர் கமழ்ந்தற்று என்று பாடம் எடுப்பது ஏனோ எனக்கு நினைவுக்கு வருகிறது.:)))

Bleachingpowder said...

பத்து மணிக்கு வர சொன்னீங்க வந்துட்டேன்... வாத்தியார் எங்கப்பா?? முத நாளே வாத்தியார் லேட்டா?? சகுனம் சரியில்லையோ.

Anonymous said...

நானும் துண்டப் போட்டுட்டேன்

puduvaisiva said...

This is a new idea to teach Hindi

really I wonder your sevice I wish you all the best and also join with you

and one more thing my blog wirter friends like this any one do teach in FRANCH by tamil it is also very useful in future

thank you Cow -Coat

puduvai siva

மங்களூர் சிவா said...

அடடா இங்க ரெஜிஸ்ட்ரேசன் போடாமலேயே மொத க்ளாஸ் அட்டெண்ட் செஞ்சிட்டேன்

இப்ப போட்டுகிடுங்க
:)

ராஜ நடராஜன் said...

அதுக்குள்ள இத்தனைபேர் முன்னால நிக்கிறாங்க.எனக்கு டிக்கட் கிடைக்குமோன்னு தெரியலயே?