இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, July 28, 2008

இந்தி பேசலாம் வாங்க -4

நீங்க ஈசியா பேச இன்னும் சில விஷயங்கள்:

பர்ஸ்ட்பெர்சன்ல கேள்வி கேட்கிறீங்க/ பதில் சொல்றீங்க. இதுக்கு கீழே உள்ள வார்த்தைய பயன்படுத்தணும்.

THAA -தா (Male)

THEE - தீ (female)

THAE- தே (Male Question).

பெண்களை குறிக்க - தீ ங்கற வார்தையை கடைசியில் சேர்த்துக்கணும்.

அதாவது : கியா கர்த்தீ ஹை

ஆண்பாலா இருந்தா கியா கர்த்தா ஹை-இப்படி வரும்.

ஒகே மேலே சொன்ன விஷயத்துக்கு வர்றேன்.


COME (வா) அப்படிங்கறதுக்கு AA ன்னு சொல்லியிருந்தோம்.
இப்ப பாருங்க.

அந்த AA வையும் THAA வையும் சேருங்க.

சேர்த்தா AATHAA (ஆத்தா) இப்படி வரும்.

Femal ஆ இருந்தா AATHEE ( ஆத்தீ )ன்னு வரும்.

Tum kidhna bajae Hindi class AATHAE / AATHEE hou?

தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?.

(நீ எத்தனை மணிக்கு இந்தி வகுப்பு வருகிறாய்?)

இதுக்கு பதில்:

Mae dhus bajae Hindi class AATTHAA hou

நான் 10 மணிக்கு இந்தி வகுப்பு வருகிறேன்.

வகுப்பு ரெண்டுல சொல்லியிருக்கிற ரூட் வெர்ப்புகளை இப்படி சேர்த்து எழுதி நீங்க ப்ராக்டீஸ் பண்ணி பேசலாம்.

நான்கு வார்த்தைகள் சொல்றேன்.

இதை, மேலே சொல்லியிருக்கிற மாதிரி THAA / THEE / THAE போட்டு எழுதுங்க.

1. KAR

2. SEE

3. LAAH

4. PEE

5. KHAA

15 comments:

Anonymous said...

தண்டம்.

ராஜ நடராஜன் said...

நான் முதல் பெஞ்சா?

குசும்பன் said...

மூன்றாம் வகுப்பு வெள்ளி அன்று எடுக்கபட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன் அதனால் இது புரியவில்லை. அதையும் படித்துவிட்டு வருகிறேன்.

Anonymous said...

thanx sir
homework is little bit tough
help us to solve

Anonymous said...

வாங்க அனானி,

உங்க மாதிரி ஆளுக, இங்க வந்து இன்னும் கட்டை போடலியேன்னுதான் இருந்தேன். வ்ந்துட்டிங்க.

ஏதோ அவருக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குக் கத்துக் கொடுக்கலாம்னு பாக்காரு. அது புடிக்காதவங்க ஒதுங்கிக்க வேண்டியதுதான

மேலும் அவரு உங்க கையப் புடிச்சு இங்க வாங்கன்னு இழுக்கலியே.

உங்களால ஊக்குவிக்க முடியாட்டி கெடுக்காம இருந்தாப் போதும்.

நன்றி, இனிமேல் வராம இருக்க.

Sridhar Narayanan said...

//தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹூம்?.//

ஆத்தே/ஆத்தீ ஹோ - இல்ல வரனும்? நமக்கு அவ்வளவா ஞானம் கிடையாது. ஆனா சந்தேகமா இருந்ததினால கேட்டு வச்சேன். :-)

ஆடுமாடு said...

அனானி, சந்தோஷம்.

ராஜ நடராஜன் நன்றி.

குசும்பன், தெளிவா இன்னொரு முறை விளக்கிடறேன்.

ஆடுமாடு said...

பானுவெற்றி சொல்றேன்.


அதுல இருக்கறதோட THAA வை சேர்க்கணும் அவ்வளவுதான்.

ஆடுமாடு said...

வடகரை வேலன்.

நம்மூர் பாசக்கார அண்ணாச்சி நன்றி.

ஸ்ரீதர் நாராயணன்,

/ஆத்தே/ஆத்தீ ஹோ - இல்ல வரனும்? //

சரிதான் பாஸ். நானே இதை போன வ்குப்புல மென்சன் பண்ணியிருக்கேன். புழக்கத்துல இல்லைங்கறதால இப்படி ஏடாகூடமாகிடுது. மாத்திடுதேன்.

துளசி கோபால் said...

அடி ஆத்தீ:-)))

மங்களூர் சிவா said...

நல்லா விளக்கியிருக்கீங்க.

Anonymous said...

//தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?.//

”தும் கித்னே பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?” தானே வரனும்??

ஆடுமாடு said...

துளசி டீச்சர், சிவா நன்றி.

பரத் அண்ணேன் முதல்லயே நான் சாரி சொல்லிடேன். நன்றி

Anonymous said...

அண்ணே,

//தும் கித்னா பஜே இந்தி கிளாஸ் ஆத்தே/ஆத்தீ ஹோ?.//

கித்னா வருமா, கித்னே வருமா??? please clarify..

கோவை விஜய் said...

//வடகரை வேலன் said...
வாங்க அனானி,

உங்க மாதிரி ஆளுக, இங்க வந்து இன்னும் கட்டை போடலியேன்னுதான் இருந்தேன். வ்ந்துட்டிங்க.

ஏதோ அவருக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குக் கத்துக் கொடுக்கலாம்னு பாக்காரு. அது புடிக்காதவங்க ஒதுங்கிக்க வேண்டியதுதான

மேலும் அவரு உங்க கையப் புடிச்சு இங்க வாங்கன்னு இழுக்கலியே.

உங்களால ஊக்குவிக்க முடியாட்டி கெடுக்காம இருந்தாப் போதும்.

நன்றி, இனிமேல் வராம இருக்க.//

வடகரை வேலன் சார் சரியாச் சொல்லியிருக்கீங்க.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com