இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, July 22, 2008

இந்தி பேசலாம் வாங்க. 2.ம் பாடம்

போன வகுப்புல கேட்ட கேள்விக்கான விடை:

1. What is This?
ஏ க்யா ஹை

2. That is This
ஓ ஏ ஹை

3. What is That?
ஓ க்யா ஹை

4. Where are you?
ஆப் கஹாங்/கிதர் ஹை

பெரும்பாலான மாணவர்கள்(?!) சரியா சொல்லியிருந்தாங்க. தப்பா எழுதின குசும்பன்(லீடரே இப்படி இருக்கலாமா?) 50 முறை சரியா எழுதிட்டு வர ஆசிரியர் உத்தரவு!.
............

ஓகே.

இந்தியில் அனைத்து வாக்கியத்துக்கும் வினைச்சொல் (verb) உண்டு.
இந்த வினைச்சொல் அனைத்தும் இறுதியில்தான் வரும்.

உதாரணம்:
'ஏ கியா ஹை"- இதில் ஹை - verb.


ஒரு வாக்கியத்தை தொடங்கும் போது Mai (நான்) என்று தொடங்கினால் முடிக்கும் போது Hou (n) ஹூ என்று முடிக்க வேண்டும்.ஷாரூக் நடிச்ச மே ஹூன் னா படம் ஞாபகத்துக்கு வருதா? (இந்தப் படத்தைதான் ராஜூ சுந்தரம் 'ஏகன்'ங்கற பேர்ல உல்டா பண்றாருன்னு இன்னொரு தகவல்)

Tum (தும்- நீ) என்று தொடங்கினால், Ho (ஹோ) என்று முடிக்க வேண்டும். AAP (ஆப்- நீங்கள்) என்றால் Hai (ஹை) என்று முடிக்கவேண்டும்.

Mai hou (n)
Tum ho
AAp hai (n)

............
I- (MAI மே) ன்னா நான்.

I am ன்னா MAI HOU (மே ஹூ)

We (நாங்கள்)ன்னா HUM-ஹம்

We are ன்னா HUM HAI (ஹம் ஹே)

YOU are ன்னா TUM HO (தும் ஹோ).

இது சூத்திரம் மாதிரி. மனப்பாடம் பண்ணிக்குங்க.

Who are you?

நீ யாரு?
Tum koun ho?

நீங்க யாரு?
Aap koun Hai


koun-ன்னா யாரு?ன்னு அர்த்தம்.

அப்புறம் ரூட் வெர்ப் க்கு போவோம்.

இது தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க்ன்னா ஈசியா பேசலாம்.


English Hindi Middle level Respect level

Come (வா) AA (ஆ) AAO (ஆவோ) AAIEA (ஆயியே)

Eat (சாப்பிடு) KHAA (கா) KHAAO (காவோ) KHAAIEA (காயியே)

Get up (எழுந்திரு) UTT (உட்) UTTO (உட்டோ) UTTIEA (உட்டீயே)

Write ( எழுது) LEEKH (லீக்) LEEKHO (லீகோ) LEEKHIEA (லீக்கியே)

See ( பார்) DHEKH (தேக்) DHEKHO (தேகோ) DHEKHIEA (தேக்கியே)

Do (செய்) KAR (கர்) KARO (கரோ) KARIEA / KIJIEA கரீயே/ககீஜீயே

Sit (உட்கார்) BAIT (பைட்) BAITTO (பைட்டோ) BAITTIEA (பைட்டீயே)

Go (போ) JAA (ஜா) JAAO (ஜாவோ) JAAIEA (ஜாயியே)

Reed ( படி) PAD (பட்) PADO (படோ) PADIEA (படீயே)

Bring ( எடு) LAAH (லா) LAAHO (லாவோ/லாஹோ) LAAHIEA (லாயியே)

Drink (குடி) PEE (பீ) PEEO (பீயோ) PEEJIEA (பீஜியே)

Take (எடு) LAE (லே) Loh (லோ) LIJIEA (லீஜியே)

Talk ( பேசு) BOL (போல்) BOLO (போலோ) BOLIEA (போலீயே)

...............................

Don't ---------Math, No/Not........Nahi/ Naa

மேக்சிமம் இதெல்லாம் 2nd person ல வரும்.

மரியாதையா நீங்க கூப்பிடணும்னா, பேசுற வார்த்தைக்கு பின்னால லீயே/ஜீயே சேர்த்துக்குங்க.

IDHAR- (இதர்)- இங்கே

UDHAR (உதர்)- அங்கே
...............

தும் இதர் ஆவோ

நீ இங்க வா

ஆப் இதர் ஆயியே

நீங்க இங்க வாங்க.


தும் தோசா காவோ

நீ தோசை சாப்பிடு

ஆப் தோசா காயியே

நீங்க தோசை சாப்பிடுங்க.
.................

இன்னைக்கு இவ்வளவுதான்.

நாளைக்கு கேள்விகள் கேட்கிறேன்.
குசும்பன் ஒழுங்கா படிக்கணும்.
.............

30 comments:

துளசி கோபால் said...

ஆடுமாடுஜீ,

யே க்யா ஹை?

//நீ தோடை சாப்பிடு//

யே தோடை கைஸா சாப்டூறதூ ஜி?

போலியே போலியே

குசும்பன் said...

சார் இம்போசிசன் எழுதிட்டு இருக்கேன்.

இரண்டாவது பாடம் கொஞ்சம் பெருசாக ஆகிவிட்டது அதனால் லீவ் நாளை லீவ் போட்டு வீட்டில் படிச்சுட்டு வருகிறேன்.

ஆடுமாடு said...

டீச்சர்,
ஸாரி, அவசரத்துல கவனிக்கலை.
சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

மாத்திட்டேன்.

Unknown said...

hmmm....
yae lesson bahuth accha hai!!!

Syam said...

உள்ளேன் ஐயா போட்டுட்டு போறேன், அப்புறமா வந்து பாடம் படிக்கிறேன்
:-)

Anonymous said...

its very uselful
thanx sir

Anonymous said...

ஆஜ் மே தோசா காயி(காயா வா)இன்னிக்கு நான் தோசை சாப்பிட்டேன். சரியா சொல்லிருக்கேனா, தப்பிருந்தா திருத்துங்க

Savukkadi said...

இரண்டாவது பாடம் ரொம்ப அருமை. தொடரட்டும்.

Savukkadi said...

//ஆப் தோசா காஜியே///

நீங்க தோசை சாப்பிடுங்க.

இது சரியா தட்டச்சு பிழை என நினைக்கிறேன்.

உங்கள் விளக்கப்படி ஆப் தோசா காலியேன்னுதானே வரனும்.

ஆடுமாடு said...

//இரண்டாவது பாடம் கொஞ்சம் பெருசாக ஆகிவிட்டது//

சாரி குசும்பன். அடுத்தாப்ல குறைச்சிருவோம்.

கமல், ஷ்யாம், பானுவெற்றி, சவுக்கடி நன்றி.

சின்ன அம்மணி நீங்க சொன்னது சரிதான்.

//ஆப் தோசா காஜியே///

சவுக்கடி, சரியா அடிச்சிருக்கீங்க. ஆமா, அது காயியேன்னு வரணும். நான் மாத்திக்கிறேன்.

Syam said...

//உங்கள் விளக்கப்படி ஆப் தோசா காலியேன்னுதானே வரனும்//

''காலியே'' னு வராது :-)

Syam said...

இதுல மனப்பாடம் பண்ண வேண்டியது நிறைய இருக்கு...அதுனால இன்னொரு நான் டைம் குடுத்து அடுத்த பாடத்த போடுங்க ப்ளீஸ்...

pudugaithendral said...

எனக்குத் தெரிந்த விடயத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1. What is This?
ஏ க்யா ஹை//

யஹ் க்யா ஹை? என்று வரவேண்டும்.


2. That is This
ஓ ஏ ஹை//

வஹ்

3. What is That?
ஓ க்யா ஹை//

வஹ் க்யா ஹை?


4. Where are you?
ஆப் கஹாங்/கிதர் ஹை

ஆப் கஹான்/கிதர் ஹை.

கலோக்கியலாக பேசும்போது உச்சரிப்பு மாறுபடும். ஆனால் கற்கும்போது முறையாக கற்த்தல் நலம் என்பதால் சொன்னேன்.
தவறாக நினைக்க வேண்டாம்.

தங்களின் பணி போற்றத்தக்கது.

ஆடுமாடு said...

//இன்னொரு நான் டைம் குடுத்து அடுத்த பாடத்த போடுங்க ப்ளீஸ்...//

ஸ்யாம் ஒகே.

ஆடுமாடு said...

புதுகை தென்றல் நன்றி.

நீங்கள் சொல்லுவது சரிதான்.

நான் முதலிலேயே ,

//இந்தி மொழியை 48 விதமாக பேசுகிறார்களாம். நீங்கள் மும்பையில் இருந்தால் நீங்கள் பேசும் இந்தியை டெல்லி காரர்கள் ஏற்க மாட்டார்கள். அது சென்னை தமிழ் மாதிரியாம்//

இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் இது ஸ்போக்கன் இந்திதான். அதற்கு இது போதும்.

இந்தி பிரசார சபா போன்றவற்றில் படத்தால் தெளிவான(அது எதுன்னே தெரியலை)இந்தி பேசலாம்.

நன்றி புதுகைத் தென்றல்.

துளசி கோபால் said...

யே க்யா ஹை
ஏக் மந்திர் ஹை
மந்திர் மே(ய்ன்)
ஏக் பந்தர் ஹை


ச்சும்மா..... இப்படி ஒரு காலத்துலே பாடிக்கிட்டு இருந்தோம்.:-)

M.Rishan Shareef said...

பொஹொத் அச்சாஹே..!
சுக்ரன் !

Anonymous said...

சார், ரொம்ப பயனுள்ளதா இருக்கு. மத்தபாடங்களுக்கு வெயிட்டிங்.

பக்கத்துவீட்டுக்கு ஒரு இந்திகார குடும்பம் வந்திருக்கு. இரண்டுபாடம் படிச்சதுமே இன்னைக்கு அவங்ககிட்ட பீலா விடனும் தோனுது. அவங்க ஏதாவது திட்டுனா உங்களுத்தான் வந்துசேரும். சொல்லிட்டேன் ;-)

மங்களூர் சிவா said...

bahut achaa hai!

நானானி said...

ஆடுமாடு!
ஸிர்ஃப் தோசா நஹி காயியே
சட்னி பி சாஹியே!!

Anonymous said...

ahacha hai

Anonymous said...

mein be padshala me thi. mein thodi dher ayi

Sariya paarththu sollunga

ராஜ நடராஜன் said...

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

இதுக்கு மட்டும் வாத்தியாரோ அல்லது கும்மி மாணவர்களோ இந்தியில எப்படி சொல்றதுன்னு சொல்லிடுங்க பார்க்கலாம்?

தெரியலின்னா " சாரே! இவ்ட வந்னு மலையாளம் படிக்கா " பதிவு மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

Anonymous said...

நல்ல, மிகவும் பயனுள்ள முயற்சி.

அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன் வாழ்த்துக்களும்.

மங்களூர் சிவா said...

/
ராஜ நடராஜன் said...

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

இதுக்கு மட்டும் வாத்தியாரோ அல்லது கும்மி மாணவர்களோ இந்தியில எப்படி சொல்றதுன்னு சொல்லிடுங்க பார்க்கலாம்?
/

க்யா கமால் ஹை யார்

ஆடுமாடு said...

//யே க்யா ஹை
ஏக் மந்திர் ஹை
மந்திர் மே(ய்ன்)
ஏக் பந்தர் ஹை//


நாங்களும் அந்த காலத்துல இதை பாடியிருக்கோம்.

நன்றி துளசி டீச்சர்.

ஆடுமாடு said...

ரிஷான், குரு, சிவா, நானானி, கண்பத் நன்றி.

ஆடுமாடு said...

மது, சண்டன்ஸ் கம்பிளீட் ஆகலை.

ராஜ நடராஜன்,

நான் ஐயோ பாவம்யா.

வகுப்புக்கு வந்ததுக்கு நன்றி.

Anonymous said...

///மது, சண்டன்ஸ் கம்பிளீட் ஆகலை.

Sariya eppadi sollarathu....

ஆடுமாடு said...

மது,

நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு இன்னொரு வாட்டி சொல்லுங்களேன்.