இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, June 16, 2008

பேச்சு

யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.


தவிப்பு
--------

தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!

மருந்து
.............
காலில் பீங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.

குங்குமத்தில் வெளியான எனது கவிதை

8 comments:

Ayyanar Viswanath said...

நல்லாருக்கு கவிஞரே

:))

ராமலக்ஷ்மி said...

//யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.//

வெகு அருமை.

ஆடுமாடு said...

நன்றி அய்யனாரே

ஆடுமாடு said...

ராமலட்சுமி நன்றி

நானானி said...

ரொம்ப நாளா காணோம்?
கவிதை...நல்லாருந்தது.
அவள் கையால் கொடுத்தால் எதுன்னாலும் அமுதமாயிருக்குமே?

ஆடுமாடு said...

//ரொம்ப நாளா காணோம்?//
வணக்கம் நானானி.

நான் எங்க போக? இங்கதான் இருக்கேன்.

//அவள் கையால் கொடுத்தால் எதுன்னாலும் அமுதமாயிருக்குமே//

போங்க எனக்கு வெக்கமா இருக்கு.

குசும்பன் said...

//யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.//

ஆபிசர் தயவு செய்து நிறைய எழுதவும்.

Unknown said...

//யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு. //

மிகவும் அருமையாக இருக்கிறது கவிதை நண்பரே :)